`இலவச மனைபட்டா கொடு... இல்லையென்றால் இதுதான் எங்கள் வீடு..!' - தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

எங்களின் நீண்டநாள் கனவு குடியிருக்க குடிமனை பட்டா. அதை இந்த அரசு கொடுக்க மறுத்து வருகிறது. பட்டா கொடுக்காவிட்டால் அலுவலகத்திலேயே குடியிருப்போம் என்று சொல்லி தஞ்சை மாவட்ட தாலுக்கா அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்ட பெண்கள் 

தஞ்சை மாவட்டத்தின் மாதர் சங்க தலைவர் கலைச்செல்வியிடம் பேசினோம், ``கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இலவச மனைபட்டாவிற்காக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காத்திருந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கணவரை இழந்து பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் வைத்துக்குக் கொண்டு தினமும் கூலிவேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். இலவச வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்துவிட்டு காத்திருந்தனர். இதுநாள் வரை அவர்களுக்கு இலவச மனைபட்டா வழங்கவில்லை. பட்டா இல்லையென்றால் அவர்களெல்லாம் அகதிகளாக வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதிகாரிகள்தான் மனுக்களை வாங்கி வைத்துக்கொண்டு நாளைக்கு வா நாளைக்குவான்னு இழுத்தடித்து வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. எந்த அலுவலகத்துக்குப் போனாலும், மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் முடிப்பதில்லை. காலம்கடந்துதான் எந்தச் செயலையும் செய்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்'' என்று வெடித்து முடித்தார். 
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!