எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: புலம்பும் சிவகங்கை மக்கள்

சிவகங்கையில் இன்று, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக, நகரின் முக்கிய சாலைகள் பஞ்சர் ஒட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் சாலைகள் சிதைக்கப்பட்டு, அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் மன்னர் கல்லூரியை அடுத்துள்ள சர்ச் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு, வி.ஐ.பி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பூங்கா மற்றும் நடைபாதைகள் புத்துணர்வு பெற்றிருக்கின்றன. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பெயின்டிங் வேலைகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், விழா நடைபெறும் மன்னர் கல்லூரியில் திடீர் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை வழியாக வரும் வாகனங்கள்,  நான்கு வழிச்சாலை வழியாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துசேர்வதற்காக  இந்தச் சாலைகள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் பேசுகையில், “இந்த விழாவிற்காக மணல் அள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதைப் பயன்படுத்தி படமாத்தூரில் திடீர் மணல் குவாரி அனுமதி இல்லாமல் அசுர வேகத்தில் முளைத்தது. மேலும் மணல் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகள்  நீதிமன்றம் வரை போயிருக்கிறது. இதன் பின்னணி மற்றும் காரணம்குறித்து விழா முடிவில் தெரியும்” என்கிறார்கள் .

சிவகங்கை நகர் பகுதியில் இன்னும் பல சாலைகள் குதிரை சவாரி செல்லுவதுபோலவே இருக்கின்றன. அதைக்கூட சரி செய்யவில்லை இந்த மாவட்ட நிர்வாகம் என புலம்பிக்கொண்டிருக்கிறார்கள், சிவகங்கை மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!