மீனாட்சி அம்மன் கோயிலில் விளக்கேற்றி வழிப்பட்ட முதல்வர்!

cm

இன்று சிவகங்கையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மதுரை வந்தார்.

பின்னர் இரவு அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த அவர் கட்சி நிர்வாகிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தினார் . மேலும் ஒரு போக பாசன விவசாயிகளும் முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது .இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம்செய்த முதல்வர், பூரணகும்ப மரியாதையைப் பெற்றுக்கொண்டார்.

’செல்லும் இடம் எல்லாம் வெற்றி கிடைக்க வேண்டும்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மனுக்கு விளக்கேற்றி, சாமி தரிசனம் செய்துகொண்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் உடன் இருந்தனர். சாமி தரிசனத்தை சிறப்பாக முடித்த முதல்வர், மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்று காலை உணவை முடித்துவிட்டு 10:30 மணி அளவில் சிவகங்கைக்கு கிளம்ப உள்ளதாக கட்சி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!