வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (18/11/2017)

கடைசி தொடர்பு:12:30 (18/11/2017)

ஜெ. அறையில் வைரக் குவியலோ தங்கக் குவியலோ இல்லை! - கலகலத்த தினகரன்

’எந்த நடவடிக்கைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நான் பயப்பட மாட்டேன்” என தினகரன் கூறியுள்ளார்.

தினகரன்

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த ரெய்டுகுறித்து தினகரன் கூறுகையில், “ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி உள்ளது. சேகர் ரெட்டி வீட்டிலிருந்ததுபோல ஜெயலலிதாவின் அறையில் வைரக் குவியலோ, தங்கக் குவியலோ இல்லை. பாழாய்ப்போன இரண்டு லேப் டாப்களை எடுத்துச்சென்றுள்ளனர். இதுபோன்ற எந்த நடவடிக்கைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்பட மாட்டேன்” எனக் கூறினார்.