'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு புரியும்...!' - நெகிழும் விஜயகாந்த்

'என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும்'  என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறி நெகிழ்ந்துள்ளார்.

விஜயகாந்த்

 

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50-லிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது விஜயகாந்த், “என் பேச்சு புரிகிறதா” என்று தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். பின்னர் அதற்கு அவரே பதில் அளித்து பேசும்போது, “என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குப் புரியும். ஈ.பி.எஸ் போன்றவர்களுக்குப் புரியாது. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை ஏற்றியது தவறு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.5 வீதம் விலையை உயர்த்தலாம். ரேஷன் கடைகளில் விற்கப்படும். மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா. தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்தியது மகிழ்ச்சி. மாநில சுயாட்சி எங்கே இருக்கிறது” என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “போக்குவரத்துத்துறையை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார்கள். போயஸ் கார்டனில் நடந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தச் சோதனை பற்றி முதல்வருக்கு முன்பே தெரியும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!