"ஆய்வு, அரசுக்கும் ஆளுநருக்கும் இடைப்பட்டது!”: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

"ஆளுநரின் ஆய்வு, அரசுக்கும் ஆளுநருக்கும் இடைப்பட்டது” என முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

ரோசய்யா

கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. குறிப்பாக, ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன. மேலும், இது தமிழகத்தின் மாநில ஆட்சிக்கு முடிவுகட்டும் ஒரு நிகழ்வு என பல முக்கிய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்புக்குரல்கொடுத்தனர்.

ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா கூறுகையில், “ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், இந்த ஆய்வு என்பது ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய விஷயம்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!