அதிகாரிகள் கடமையைச் செய்திருக்கிறார்கள்...! போயஸ் கார்டன் சோதனை பற்றி திவாகரன் கருத்து

வருமான வரித்துறை அவர்களுடைய கடமையைச் செய்திருக்கிறார்கள் என்று போயஸ் கார்டனில் நடந்த சோதனைகுறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

தடாலடி திவாகரன் பேட்டி

 

திவாகரன் இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  “என்னுடைய வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை இப்போது  போயஸ் கார்டன் வரை போய் முடிந்துவிட்டது. அதிகாரிகள் அவர்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். யார் வீட்டில் வேண்டுமானாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம். தலைமைச்செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். சேகர்ரெட்டி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடந்தது. போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை குறித்து எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது.

என்னுடைய வீட்டிலோ, கல்லூரியிலோ வருமான வரித்துறையினர் பென்டிரைவ், சிடி போன்ற எதையும் கைப்பற்றவில்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிகுறித்து எதிர்க்கட்சிகளின் கருத்து என்னவோ, அதுதான் என் கருத்தும். எங்களைப் பொறுத்தவரை, வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் உரிமை மீறல் செய்யவில்லை.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கட்சியை விட்டு நீக்கப்பட்டோம். அதன்பிறகு நாங்கள் அதிகாரத்தில் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்கச்சொல்லி எடப்பாடி அரசுமீது தி.மு.க போட்டுள்ள வழக்கில் நீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் அன்று ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள் வெளியில் வருவார்கள்.

எல்லா தலைவர்களும், கட்சி பாராமல் எல்லா தலைவர்களையும் சந்திக்க வேண்டும். அப்படியொரு நாகரிகமான அரசியல்தான் தமிழகத்தில் உருவாக வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!