வ.உ.சி. சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்தால் மட்டும் போதுமா? வ.உ.சி. கொள்ளுப்பேத்தி கேள்வி

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்  மற்றும் நினைவு தினங்களில், அவரது சிலைக்கு அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செய்தால் மட்டும் போதுமா என்று அவரது கொள்ளுப்பேத்தி செல்வி கேள்வியெழுப்பியுள்ளார். 

வ.உ.சி கொள்ளுப்பேத்தி மலர் தூவி மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 81-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி செல்வி, தனது வீட்டில் உள்ள சிதம்பரனாரின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரனாரின் பிறந்தநாள் அன்றும், நினைவு நாள் அன்றும் அரசு சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டால் மட்டும் போதுமா? அவர், சுதந்திரப் போராட்டத்துக்காக போராடிய வீரர் மட்டுமல்லாமல் சிறந்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.  ஏழை, எளியவர்களுக்காக இலவசமாகவே வாதாடிய பண்பு அவரிடம் இருந்தது. அரசு ஒவ்வொரு வருடமும் அவருக்கு மரியாதை செய்தால் மட்டும் போதாது. நாங்கள் பல முறை அரசிடம் வைத்த கோரிக்கை இதுதான். வ.உ.சி.யின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!