பொருளாளரா?... செயல் தலைவரா?... கன்ஃப்யூஸ் ஆன சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்!

இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மற்றும் எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை கூட்டம்

கூட்டத்தில் பேசிய கே,ஆர். ராமசாமி, தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக, பொருளாளர் ஸ்டாலின் என்று தனது உரையை ஆரம்பித்தார். இதைக்கேட்டு அனைவரும் சிரிக்கவே, `சாரி செயல்தலைவர் ஸ்டாலின்' என்று சுதாரித்தார்.

ராமசாமி

பின்னர் தனது உரையைத் தொடங்கிய ராமசாமி, மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது ஆட்சி மாற்றம் மிகவும் அவசியமான ஒன்று. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நமது எதிர்க்கட்சித் தலைவரும் என்னெல்லாமோ செய்து பார்க்கிறார். ஆனால், நாம் நினைப்பது நடக்கவில்லை. ஆனால், ஏதாவது ஒன்றை செய்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!