'ஆவி ஸ்பெஷலிஸ்ட்..!': பன்னீர்செல்வத்தை கலாய்த்த திருநாவுக்கரசர்

இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மற்றும் எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை கூட்டம்

கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், `கருணாநிதியை மோடி பார்த்ததில் தவறில்லை. ஒரு மூத்த தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அவரைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், தனது தோழி என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதா 73 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும் ஒரு முறைக் கூட அவரை மோடி பார்க்கவில்லை.

திருநாவுக்கரசர்

போயஸ் கார்டன் கோயில், அம்மாதான் சாமி என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அந்த கார்டனில் ஐ.டி ரெய்டு நடத்துகிறார்கள். இது குறித்து, இருவரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். எடப்பாடி தன் வீட்டில் ரெய்டு வரக்கூடாது என்பதற்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளிந்து கொள்கிறார். நம்ம ஆவி ஸ்பெஷலிஸ்ட் பன்னீர்செல்வமும் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!