வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (19/11/2017)

கடைசி தொடர்பு:10:15 (19/11/2017)

”கருணாநிதி அழைத்தால் மீண்டும் வருவேன்”: சென்னையில் மு.க.அழகிரி

"தி.மு.க தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" என சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி தெரிவித்தார்.

அழகிரி

பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இன்றைய தமிழக அரசியல் சூழலில் யார் யாரோ வருகிறார்கள், பேசுகிறார்கள், ஊடகங்களில் சவால் விடுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் தலைப்புச் செய்தியாக இருந்த மு.க.அழகிரியின் சத்தத்தை மட்டும் காணோம். இந்தநிலையில்,  ‘‘தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் இருப்பதால் எங்களுக்கு ஒரு பிரச்னையுமில்லை. இந்த நேரம் அழகிரி இருந்திருந்தால் எங்களுக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு கொம்பு சீவிவிட, அது சில நாள்களாக தி.மு.க-வுக்குள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி கூறுகையில், “தி.மு.க தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” எனக் கூறினார்.