வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/11/2017)

கடைசி தொடர்பு:11:00 (19/11/2017)

கிரண்பேடியை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்

கிரண் பேடி

புதுச்சேரிக்கு ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் வார இறுதி நாட்களில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.

அதன்படி புதுச்சேரி, நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூருக்கு இன்று காலை ஆய்வுக்கு சென்றார் கிரண்பேடி. அப்போது இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டதாக புகார் தெரிவித்து கிரண்பேடியை திரும்ப போகச்செல்லி பொதுமக்கள் கோஷமிட்டதோடு முற்றுகையிடவும் முயற்சி செய்தனர்.

அதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் பொதுமக்களுக்கும் போலீசாருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அவர்களிடம் பேசிய கிரண்பேடி, “உண்மை நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆளுநர் மாளிகைக்கு வாருங்கள் அல்லது தகவல் உரிமை சட்டத்தில் கேட்டுப்பெறுங்கள். நான் எதற்கும், எந்த நலத்திட்டங்களுக்கும் தடையாக இல்லை” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறிது நேரம் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க