”அ.தி.மு.க-வை அழிப்பதற்கான உச்சபட்ச நடவடிக்கை”: தினகரன் காட்டம்

”அ.தி.மு.க-வை அழிப்பதற்கான உச்சபட்ச நடவடிக்கை தான் வருமான வரித்துறையின் சோதனை” என தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் இரண்டு நாள்களுக்கு முன்னர் இரவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தினகரன் கூறுகையில், “அ.தி.மு.க-வை அழிப்பதற்காக நடைபெறும் உச்சகட்ட நடவடிக்கைதான் வருமானவரி சோதனை. லேப்டாப் என்றால் பென் டிரைவ் இருக்கத்தானே செய்யும். பென் டிரைவ் என்றாலே ரகசியம் உள்ளது என எவ்வாறு கூற முடியும்? ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சிலர் செய்த சதியின் காரணமாகவே நாங்கள் ஒதுக்கப்பட்டோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!