வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (19/11/2017)

கடைசி தொடர்பு:12:50 (19/11/2017)

”சோதனையில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-க்குத் தொடர்பு இல்லை”: விளக்கும் திண்டுக்கல் சீனிவாசன்

"போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரிச்சோதனையில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-க்குத் தொடர்பு இல்லை” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் இரண்டு நாள்களுக்கு முன்னர் இரவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது வழக்கமான நடைமுறையே ஆகும். வருமான வரித்துறையினர் அவர்களது கடமையை தான் செய்தனர். இந்த வி‌ஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை.