பறவைகள் சரணாலயத்தில் முயல் வேட்டையாடியவர்கள் கைது!

முயல் வேட்டையாடிய 4 பேரை ராமநாதபுரம் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 10 முயல்களை பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலர் சதீஷ் தலைமையில் வன உயிரின சரக ஊழியர்கள், வேட்டை தடுப்பு ஊழியர்கள் தேர்த்தங்கள் பறவைகள் சரணாலய பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சிலர் முயல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து சோதனை நடத்தியதில் 10 முயல்கள் மற்றும் ஒரு ஆள் காட்டும் குருவி ஆகியவை பிடித்து வைத்திருப்பது தெரியவந்தது.
 

ராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய 4 பேர் கைது 


இதையடுத்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னையன், சிரஞ்சீவி, விஜய், ராஜேஸ் ஆகிய நால்வரையும், முயல் வேட்டைக்கு பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களையும் மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பக அறக்கட்டளையின் வன உயிரின காப்பாளர் அசோக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வேட்டையாட  தடை செய்யப்பட்ட  உயிரினங்கள் பட்டியல் 4-ல் அடங்கியுள்ள முயல்களைப் பிடித்த குற்றத்துக்கு 3 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தல் அல்லது தலா ரூ 25 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கவோ வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!