வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (20/11/2017)

கடைசி தொடர்பு:14:45 (09/07/2018)

கரூர் மாவட்டத்தில் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு! உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 

"கரூர் மாவட்டத்தில் கலைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் திட்டத் தொகையினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்" என்று கரூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,  "கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், திருவள்ளுவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், சிந்தலவாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கரூர் ஏற்றுமதி உற்பத்தி திட்டம், தொழிற்பேட்டை, க.பரமத்தி தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தின் மேற்கண்ட கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருந்து திட்டக் காலம் முடிவுற்ற மற்றும் விலகிய உறுப்பினர்கள், அவர்களது திட்டத் தொகையினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் திட்டத் தொகையினை திரும்ப பெற்றுக்கொள்ள உரிய ஆவணங்களுடன் கோரிக்கையினை கரூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகம், வி.வி.ஜி நகர், வெங்கமேடு, கரூர் என்ற முகவரியிலோ அல்லது தங்களது பகுதியின் அருகாமையில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கோரிக்கையை சமர்ப்பி, சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத் தொகையினை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.