'யானை போல் செயல்படுகிறது தமிழக அரசு! நீதிபதிகள் காட்டம்

 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பிடு தரக்கோரி  மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு ஏற்கெனவே 2 முறை விசாரணைக்கு வந்துவிட்டது. ஆனால், அரசு தரப்பில் பதில் ஏதும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பதில் ஏதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர், வரையறை தயார் ஆகி வருகிறது.  விரைவில் முடிந்துவிடும் எனத் தகவல் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், இவ்வளவு காலதாமதமா. அரசு யானை போல மெதுவாகச் செயல்படுகிறது எனக் காட்டமாகக் கூறினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 13ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் இதுவே இறுதியான கால அவகாசம் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!