வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (22/11/2017)

கடைசி தொடர்பு:08:21 (22/11/2017)

பயிர்க் காப்பீடு செய்யாமல் வங்கிகள் ஏமாற்றப் பார்க்கின்றன! விவசாயிகள் புகார்

இம்மாத இறுதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் வங்கிக் கணக்கு ஆரம்பித்து காப்பீடு  செய்வதில் சிக்கல் நீடித்துவருகிறது. இதைக் கண்டித்து, விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக புகார் அளித்த மேலப்பிடாவூர் கிராம விவசாயிகளிடம் பேசும்போது, ’சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புளியங்குளம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட  புளியங்குளம் கீழமாயாளி,மேலமாயாளி, ஆ.விளாக்குளம்,பில்லத்தி ஆகிய ஐந்து கிராம மக்கள், புளியங்குளம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை வங்கியில் வரவு-செலவு வைத்துள்ளார்கள். இந்த கிராமங்களுக்கான அடங்கல் பதிவை ஆன்லைனில் செய்ய முடியவில்லை என்று  இந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்வதில் காலதாமதம் செய்து வருகிறார்கள். காரணம் கேட்டால், மேலப்பிடாவூர் கிராமங்களின் நிலஆவணங்கள் வங்கியில் பதிவாகவில்லை. ஆகையால், காப்பீடுசெய்ய முடியாது என்கிறார்கள். இம்மாத இறுதிக்குள் காப்பீடுசெய்ய வேண்டும் என்ற நிலையில், நாங்கள் மட்டும் அதைச் செய்ய முடியாமல் இருக்கிறோம். எங்களுக்கு கூடுதல் காலஅவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். மேலும், கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் சரிவர வழங்கப்படாத நிலையில்  காலதாமதமாக பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அதுபோன்று இந்த ஆண்டும் எங்களுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் தயங்குகிறோம்’ என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க