வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (22/11/2017)

கடைசி தொடர்பு:09:53 (22/11/2017)

"உழவன் பொழப்பு என்னாகுங்க?" - வாட்ஸ்அப் வைரலாகும் கரும்பலகை வாசகங்கள்!

'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில்,  கவுண்டமணி பாடும் 'ஊருவிட்டு ஊரு வந்து, காதல், கீதல் பண்ணாதீங்க' என்று பாடும் பாடலை அப்படியே உல்டா பண்ணி, விவசாயி ஒருவர்  கரும்பலகையில் எழுதிய வாட்ஸ்அப் வாசகங்கள், தற்போது வைரலாகப் பரவி, பலரது கண்களைக் குளமாக்கிவருகிறது.

அதை எழுதிய விவசாயியைப் பற்றியோ, அதைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் போட்ட நபரைப் பற்றியோ விவரங்கள் தெரியவில்லை. ஆனால், அந்தக் கரும்பலகையில் எழுதியிருக்கும் வாசகங்கள், படிப்போர் இதயத்தை உடைக்கும் விதமாக இருக்கிறது. 'அப்படி என்னதான் எழுதிவிட்டார்' என்று கேட்கிறீர்களா? 

' ஊரு விட்டு ஊரு வந்து ஆற்று மணலை அள்ளாதீங்கோ. ஆறு கெட்டுப் போச்சுதுன்னா, உழவன் பொழப்பு என்னாகுங்க?"
இதுதான் அந்த வரிகள். இந்நிலையில்,

மணல் கொள்ளையைத் தடுக்கவும் தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான மணல் தட்டுப்பாடு சிக்கலைத் தீர்க்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி முதல் கன்னியாகுமரி வரை புதிதாக 70 மணல் குவாரிகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.