சர்க்கரை விலை உயர்வுக்கு எதிராக ரேஷன் கடை முன்பு ஆர்ப்பரித்த தி.மு.க-வினர்!

தி.மு.க தமிழகம் முழுவதும் சர்க்கரை விலையேற்றம் மற்றும் முறையாக ரேஷன் கடைகளில் பொருள்களை விநியோகம் செய்யாமல் மக்கள் விரோதப்போக்கை கடைப்பித்துவரும் ஆளும் எடப்பாடி அரசைக் கண்டித்து இன்று நவம்பர் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு முன்பாக இன்று தி.மு.க தலைவர்களும் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  

திமுக ஓசூர் ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் சுகவனம் கிருஷ்ணகிரி நகரப் பகுதியிலும், மேற்கு மாவட்டச் செயலாளர்  வை.பிரகாஷ் தேன்கனிகோட்டையிலும் ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் சர்க்கரை விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கும் மத்தியில்ஆளும் பா.ஜ.க.வையும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடிஅரசையும் கடுமையாகக் கண்டித்துப்  பேசிய தி.மு.க  தலைவர்கள், `ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் சர்க்கரை  விலையேற்றத்தை  ஆளும் எடப்பாடி அரசு  உடனே கைவிட  வேண்டும்' என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நகரச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன் ஜு.வி வெளியிட்டு இருந்த ரேஷன் கடை இருக்குமா என்ற அட்டைப் படத்தை தி.மு.க ஆர்ப்பாட்ட போஸ்டர்களில் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள தி.மு.க போஸ்ட்டரில் ஜு.வி அட்டைப் படம்  தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!