சுகோய் போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாகப் பாய்ந்தது பிரமோஸ்! | BrahMos missile successfully tested for 1st time from Sukhoi-30MKI fighter

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (22/11/2017)

கடைசி தொடர்பு:17:17 (22/11/2017)

சுகோய் போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாகப் பாய்ந்தது பிரமோஸ்!

சுகோய் விமானத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய விமானப்படையில் உள்ள சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானம் அதிக எடைகொண்ட ஏவுகணைகளைச் சுமந்து சென்று ஏவும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. பிரமோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. சுகோய் ரக போர் விமானத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணையை  ஏவும் சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.  சுகோய் விமானத்தில் பாய்ந்த பிரமோஸ் ஏவுகணை வங்காள விரிகுடா கடலில் இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. இதையடுத்து, பிரமோஸ் ஏவுகணை முப்படைகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே தரைப்படை, கப்பற்படையில் பிரமோஸ் ஏவுகணை இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான பிரமோசஸின் வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுகோய் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரித்துள்ளது'' எனக் கூறியுள்ளது. 

முப்படைகளிலும் பிரமோஸ் ஏவுகணை பயன்பாட்டுக்கு வந்துள்ளது மைல்கல் சாதனையாகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க