மகளின் பிறந்த நாளில் இன்ஸ்டாகிராமில் வந்த டோலிவுட் ஹீரோ..!

டிகர் அல்லு அர்ஜூன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக அவரது மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

அல்லு ஆர்ஹா

 

டோலிவுட்டில் ஃபேமஸ் நடிகரான அல்லு அர்ஜூன் கடந்த 20ம் தேதி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவருடைய மகள் அல்லு ஆர்ஹாவின் முதல் பிறந்தநாளான நேற்று(23.11.17)  ஆர்ஹாவின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அன்றைய நாள் எனக்கு மிகவும் மறக்க முடியாத நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இணைந்த தகவலை தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ள அல்லு, என்னுடைய மகளின் முதல் பிறந்த நாளில் புகைப்படத்தை பதிவிட்டது மறக்க முடியாதது. என் வீட்டின் குட்டி தேவதை ஆர்ஹா. அதற்குள் ஒரு வருடம் முடிந்துவிட்டதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். ஆர்ஹாவின் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!