டெங்குக் காய்ச்சலை ஒழித்திட நாகர்கோவிலில் நூதன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் தினம்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியுள்ளனர். இதை முன்வைத்து வலையால் மூடிக்கொண்டு நாகர்கோவிலில்  நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் பெயர் தெரியாத காய்ச்சலால் தினம்தோறும் ஏராளமான உயிரிழப்புகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் மெத்தனப்போக்கால் இதுவரை தமிழகத்தில் காய்ச்சலுக்கு 132 பேர் பலியாகி உள்ளனர். 11,186 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்க உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து டெங்கு போன்ற காய்ச்சலை ஒழித்திட தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலை கொசுவலைகளால் மூடியபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெங்குக் காய்ச்சல் கேரளாவின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் டெங்குக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!