தயாநிதி அழகிரியை கைது செய்ய நீதிமன்றம் தடை!

மதுரை: கிரானைட் விவகாரம் தொடர்பாக தம்மீதான பிடிவாரன்டை ரத்து செய்ய கோரி  தயாநிதி அழகிரி சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு, நவம்பர் 2-ம் தேதி வரை கைது  செய்ய தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி மதிவாணன், நவம்பர் 2ம் தேதி  வரை தயாநிதியை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும்  நவம்பர் 2 தேதிக்குள் அரசு பதில் மனு  தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு துரை தயாநிதிக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!