மருத்துவர்மீது ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை பாலியல் புகார்! | Olympics gold medalist Gabby Douglas alleges abuse by farmer physician Larry

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (23/11/2017)

கடைசி தொடர்பு:14:25 (23/11/2017)

மருத்துவர்மீது ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை பாலியல் புகார்!

கேபி டக்லஸ்

லிம்பிக்கில் மூன்று முறை தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கேபி டக்லஸ், முன்னாள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்த லேரி நாஸ்ஸரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் கூறியிருக்கிறார். ’பெண்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும்’ என்று கேபி ட்விட்டரில் தெரிவித்த கருத்து, பெரிய அளவில் எதிர்ப்பைச் சந்திக்க, அதற்கு மன்னிப்புக் கேட்டும், தானும் லேரியால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் கேபி. 

லேரி நஸ்ஸார் மீது இதுவரை 18-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள். அதில், 'பெரும்பாலானோர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது மைனர்களாகவும், சிலர் தற்போதும் மைனர்களாகவும் இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளனர். மேலும், இதுவரை 125 பெண்கள் லேரிக்கு எதிராக பாலியல் குற்றாச்சாட்டைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

2012 தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் குழுவில் மட்டும், டக்லஸுடன் சேர்த்து இது வரை மூன்று பேர் பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள். லேரிக்கு 25 முதல் 40 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


அதிகம் படித்தவை