வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (23/11/2017)

1.5% உரிமக் கட்டணம் கேட்ட பார் உரிமையாளர்கள் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக்

டாஸ்மாக் பார் உரிமக் கட்டணம் மூன்று சதவிகிதம் கட்டவேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் சுமார் 250 க்கும் மேற்பட்டோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை இன்று மாலை விசாரித்த உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டாஸ்மாக்கில் கடந்த அக்டோபர் மாதம் மது விற்பனை கூடியது. இதனால் டாஸ்மாக் 'பார்'க்கான உரிமக் கட்டணமும் மூன்று சதவிகிதமாகக் கட்டவேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதை எதிர்த்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று சதவிகித வரி கட்டமுடியாது. மேலும் வரியை 1.5 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் டாஸ்மாக் உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.