ஆட்டம் அதிகரிக்கும்... அழிவு விரைவுபடும்; எதைக் குறிப்பிடுகிறார் ராமதாஸ்?

இரட்டை இலைச் சின்ன தீர்ப்புகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'இனி ஆட்டம் அதிகரிக்கும்.. அழிவு விரைவுபடும் ' என்று கூறியுள்ளார்.

ராமதாஸ்


இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதுபற்றி பல்வேறு தலைவர்களும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்குப்பின் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை. மத்திய அரசின் விருப்பப்படியே செயல்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதில் தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது. 122 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 37 எம்.பி-க்கள் ஆதரவுடன் இருந்தபோது, சின்னத்தை ஏன்  முடக்கினார்கள். தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்” என்று கூறியிருந்தார்.

இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு. இனி ஆட்டம் அதிகரிக்கும்.... அழிவும் விரைவுபடும். அப்புறமென்ன... இனி ஆர்.கே. நகர் தேர்தல் அவசரமாக நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்!” என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!