மதுரை ஆதீனத்தை நீக்க கோரி தமிழக அரசு அவசர வழக்கு!

மதுரை:மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பான வழக்கில்  ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரிய மதுரை ஆதீன தரப்பின்  கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறை சார்பாக   தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற்றது.

அப்போது இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த 13 ஆவணங்களையும் படித்துப் பார்க்க  அவகாசம் கோரி ஆதீனம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், அரசு தாக்கல் செய்துள்ள  ஆவணங்கள் மதுரை ஆதீனம் சமர்ப்பித்த ஆவணங்கள் தான் என்றும், எனவே அவகாசம்  அளிக்க தேவையில்லை என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

இதனிடையே மதுரை நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்  நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளது.மதுரை  ஆதீனத்தின் இந்த மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

நித்தியானந்தா நியமனத்தை எதிர்க்கும் வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தை அரசே ஏற்பது பற்றி, அரசு  சார்பில் மதுரை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!