வெளியிடப்பட்ட நேரம்: 01:12 (24/11/2017)

கடைசி தொடர்பு:09:24 (24/11/2017)

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு..!

டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள், டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன


டிசம்பர் 1-ம் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 2-ம் தேதியை மிலாது நபி பொதுவிடுமுறையாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது. தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று, மிலாது நபி விடுமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 2-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினம் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2-ம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 5-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.