கமல்ஹாசனை கவுண்டமணியாக மாற்றிய நெட்டிஸன்கள்!

கமல்ஹாசன், சமீபத்தில் அவரது ட்விட்டர் புரொஃபைல் படத்தை மாற்றியுள்ளார். அந்தப் படத்தில், கமல் மீசையை முறுக்கிக்கொண்டு, பார்க்கும் பார்வையில் ரௌத்திரம் ஏற்றிக்கொண்டு, பாரதியார் தோற்றத்தில் இருப்பார். ‎அந்தப் படம், இணையத்தில் பயங்கர வைரலானது. 

 

இந்த நிலையில், தற்போது கமல் படத்துக்குப் பதிலாக கவுண்டமணி படத்தை அதே கலர், அதே கெட்டப்பில் மார்ஃபிங் செய்து, உடனடியாக உலவ விட்டிருக்கிறார் , ட்விட்டரில் இருக்கும் ராஜேஷ் என்னும் டிசைனர். கமலின் அசல் புரொஃபைல் படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத அளவு இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல நெட்டிஸன்கள், இந்தப் படத்தை தங்களது புரொஃபைல் போட்டோவாக உடனடியாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள். ‎சமூக, அரசியல் நடவடிக்கைகளை உடனுக்குடன் பகடி செய்யும் நபர்களின் மனம் கவர்ந்த படமாக இந்தக் கவுண்டமணி படம் மாறிவிட்டது. கமலின் ஒவ்வொரு ட்விட்டும் ஏதொவொரு அதிர்வலையை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!