”சின்னப்பிள்ளைத்தனமாகப் பேசுகிறார் திருநாவுக்கரசர்”: ட்விட்டரில் தமிழிசை கலாய்!

'சின்னப்பிள்ளைத்தனமாகப் பேசுகிறார் திருநாவுக்கரசர்' என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழிசை

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  

நேற்று, 'இரட்டை இலை' சின்னம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை, தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை விமர்சித்துள்ளார். தமிழிசை தன் ட்விட்டர் பதிவில், “இரட்டை இலை சின்னத்தை பா.ஜ.க வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்பிள்ளைத்தனமாகப் பேசுகிறார் திருநாவுக்கரசர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!