வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (24/11/2017)

கடைசி தொடர்பு:09:15 (24/11/2017)

”இந்த அரசு நீடிக்குமா?”: வைகோ கேள்வி!

"அரசியலில் நிலவும் குழப்பதினால், தமிழக அரசு நீடிக்குமா?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகோ

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக்கொள்ளத் தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பா.ஜ.க-வின் தயவால்தான் கிடைத்தது என ஒரு சாரார் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இன்றைய அரசியல் சூழலில் நிகழும் குழப்பங்களால், தமிழக அரசு நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.