''சீனாவுடன் இருக்கவே விரும்புகிறோம்!'' - திபெத் தலைவர் தலாய்லாமா | Tibet wants to stay with China, says Dalai Lama

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (24/11/2017)

கடைசி தொடர்பு:14:50 (24/11/2017)

''சீனாவுடன் இருக்கவே விரும்புகிறோம்!'' - திபெத் தலைவர் தலாய்லாமா

சீனாவிடம் இருந்து சுதந்திரம் தேவையில்லை இணைந்து செயல்படவே விரும்புவதாக திபெத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். 

திபெத் தலைவர் தலாய்லாமா

கொல்கத்தா சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா பேசியதாவது, ''சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்பினாலும் திபெத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளது. சீனாவின் கலாசாரம் வேறு. திபெத்தின் கலாசாரம் வேறு.

சீனர்கள் தங்கள் நாட்டை நேசிப்பதுபோல திபெத்தை நாங்கள் நேசிக்கிறோம். திபெத் பீடபூமி யாங்ட்சூ, சிந்து போன்ற முக்கிய நதிகளின் பிறப்பிடம். இந்த பீடபூமி பாதுகாக்கப்பட வேண்டியது கோடிக்கணக்கான மக்களுக்கும் நல்லது. சீனர்கள்  இந்தியர்களைவிட சுறு சுறுப்பானவர்கள். இந்தியர்கள் சற்று சோம்பேறித்தனமுள்ளவர்களாக இருக்க காலநிலையும் ஒரு காரணமென்று கருதுகிறேன். 

இந்தியர்களிடையே மதரீதியிலான சகிப்புத்தன்மை அதிகம். அரசியல்வாதிகள்தான் மத சகிப்புத்தன்மைக்கு சில சமயங்களில் குறைந்துவிடுவதாக தோன்றுகிறது. ஒற்றுமையுடன் குடும்பமாக வாழ்வது இந்திய கலாசாரம். இதே கலாசாரத்தையே திபெத்தும் பின்பற்றுகிறது. நவீன கல்வியுடன் மனித மகத்துவத்தையும் சேர்த்து இளையதலைமுறைக்கு கல்வியாக புகட்ட வேண்டிய சூழலை உருவாக்கி விட்டோம். கடந்த 100 ஆணடுகளில் நாம் இதை செய்யத் தவறியதால், வன்முறை பெருகியுள்ளது. மதங்கள்கூட மனிதர்களை இணைப்பதில் தோல்வியடைந்துள்ளன'' எனத் தெரிவித்துள்ளார். 

1962 -ம் ஆண்டு தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால்தான் இந்தியா- சீனா போர் மூண்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க