நீர்நிலைகளில் பாதரசக்கழிவு! − அச்சத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டார நீர்நிலைகளில், பாதரசக்கழிவு கலந்திருப்பதாக அச்சம் தெரிவிக்கும் விவசாய சங்க நிர்வாகிகள், இன்று மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து, நீர்நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் எனக் கோரி மனு கொடுத்தனர்.

​​​​​​

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில துணைச் செயலாளர் செங்குட்டுவன், "கொடைக்கானலில் மூடப்பட்ட தெர்மாமீட்டர் நிறுவனம் தொடர்பான மர்மம் நீடித்துவரும் சூழலில், தேனிமாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, வைகை அணை, கும்பக்கரை, நந்தியாபுரம் குளம், பட்டத்தி குளம், புதுக்குளம், கல்லாறு, வராகநதி மற்றும் அனைத்து நீர்நீலைகளிலும் பாதரசக்கழிவு கலந்திருக்கக் கூடும் என பொதுமக்களும் விவசாயிகளும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், மனிதனின் மூளை மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உரிய ஆய்வுசெய்து, நீர்நிலைகளில் பாதரசக் கழிவு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்றார். கோரிக்கை மனுவோடு, நீர்நிலைகளின் தண்ணீர் மாதிரிகளைக் கொண்டுவந்து கலெக்டரிம் கொடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!