வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (24/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (24/11/2017)

சர்ச்சையைக் கிளப்பும் சத்ருகன் சின்ஹாவின் `டீக் கடைக்காரர்' பேச்சு!

தொலைக்காட்சி நடிகை மனிதவளத்துறை அமைச்சராகும் போது நான் பொருளாதாரம் பற்றி பேசக் கூடாதா என பாரதிய ஜனதா கட்சி எம்.பி சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார். 

டீக்கடைக்காரர் என பிரதமரை சத்துருகன் விமர்சனம்

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய சத்ருகன் சின்ஹா, '' வக்கீல் பாபு (அருண்ஜெட்லி) பொருளாதாரம் பற்றிப் பேசுகிறார். ஒரு டி.வி. நடிகை (ஸ்மிருதி) மனிதவளத்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். ஒரு டீக்கடைக்காரர்... வேண்டாம் இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை... இப்படியிருக்கையில் சினிமாத்துறையில் இருந்து வந்ததால் நான் பொருளாதாரம் பற்றிப் பேசக் கூடாதா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு பறிபோயிருக்கிறது. மக்கள் பாதிக்கப்படும் போது, ஏழை மக்களுக்காக இளைஞர்களுக்காகப் பேசாவிட்டால் அரசியலில் நான் இருப்பதால் என்ன பயன். மான் கி பாத்திலிருந்து நான் பேசவில்லை. மனதிலிருந்து பேசுகிறேன். மான் கி பாத்துக்கான உரிமத்தை வேறு ஒருவர் வாங்கி வைத்துள்ளார். 

பசுக்காவலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அமைச்சர் பதவி எனக்குக் கிடைக்காததால் கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசுவதாகச் சிலர் கூறுகின்றனர். அமைச்சர் பதவிக்கு எல்லாம் நான் ஆசைப்பட்டதில்லை'' என்று கூறினார். 

இரு நாள்களுக்கு முன் இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை டீக்கடைக்காரராக சித்திரித்து மீம் வெளியிட்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அந்த மீமுக்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா  வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், சத்ருகன் சின்ஹா இவ்வாறு பேசியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க