ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - திணறிய புதுக்கோட்டை

புதுக்கோட்டை பொன்னமராவதி அறந்தாங்கி  ஆலங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இன்று ஜாக்டோ -ஜியோ சார்பில் அதன் கூட்டமைப்பைச்சார்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாடுகளை நிக்குதல் சி.பீ.எஸ்- ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து, அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைப்பின் பொறுப்பாளர்களும் அமைப்பாளர்களும் தங்களது வழக்கமான கோரிக்கைகளான மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்கவும், 01.01.2016 முதல் 21  மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையினை ரொக்கமாக கொடுக்கவும் பங்களிப்புடன் கூடிய ஒய்வூதியத் திட்டத்தை கைவிட்டு 01.04.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.

இதில், ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பொறுப்பாளர்களாக, அமைப்பாளர்களாக உள்ளவர்களும் உறுப்பினர்களாக இருக்கும் பல்வேறுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர். இவர்களின் ஆர்ப்பாட்டத்தால் புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்கள் சில மணி நேரங்களுக்குத் திணறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!