சின்னம் கிடைத்தபின் முதல் விழா - எடப்பாடி மகிழ்ச்சி!

ராமநாதபுரத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு செல்லும் வழியில் மதுரை அருகே தோப்பூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த 100 அடி உயரமுள்ள கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கலந்துகொண்டார்.


கொடி ஏற்றி வைத்துப் பேசும்போது, ``நமக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் கட்சியினர் இருக்கும்போது முதல் நிகழ்ச்சியாக மதுரையில் நடைபெறும் விழாவில் இங்கு கலந்துகொள்கிறேன். சின்னம் கிடைத்த மகிழ்ச்சியோடு நூறடி கம்பத்தில் கொடி ஏற்ற வைத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். எம்.ஜி.ஆர் விழாவை தற்போது சிறப்பாக நடத்தி வருகிறோம். இதற்கு காரணம் மதுரை.
மதுரை ராசியான மண். இங்குதான் எம்.ஜி.ஆருக்கு முதல் விழா நடத்தினோம். அதுபோல் இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததும் முதல் விழா இங்கு நடைபெறுகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவர் உருவாக்கிய சின்னம் இரட்டை இலை. அதை காப்பதே நம் லட்சியம். தர்மம் நிலைநாட்டப்படுள்ளது. இருவரின் லட்சியங்களைக் காப்பதே நம் பணியாகும்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வரவில்லை. மாவட்டக் கழகம் சார்பாக வைக்கப்பட்ட விளம்பர பேனர்களில் ஓ.பி.எஸ்  பெயர் வைக்கப்படாதது கட்சியினரிடயே மனம் ஒன்று சேரவில்லை என்பதைக் காட்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!