மாணவிகளுடன் கலந்துரையாடிய சப்-இன்ஸ்பெக்டர் யாஷினி!

காவல்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் திருநங்கையான ப்ரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டராகப் பணியமர்த்தப்பட்டார். காவல் பணிகளை ஆர்வமாகவும் உற்சாகத்துடன் ப்ரித்திகா யாஷினி செய்துவருகிறார். இரவுப்பணி, ரோந்துப்பணி என பிஸியாக இருந்து வரும் யாஷினியின் ஒருநாள் பணி எப்படியிருக்கிறது என்று விகடன் டாட்காமில் செய்தி வெளியிட்டிருந்தோம்

yasini
 

இந்தச் சூழ்நிலையில் காவல்நிலையங்களின் பணி குறித்த விவரங்களைப் பள்ளி மாணவிகளுக்கு தெளிவாக இன்று விளக்கினார் யாஷினி, காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி, அன்றாடப் பணிகள் என அனைத்தையும் மாணவிகளுக்குப் புரியும்படி தெரிவித்தார். யாஷினியின் பேச்சை மாணவிகளும் ஆர்வத்துடன் கவனித்தனர். அப்போது, சூளைமேடு போலீஸார் உடனிருந்தனர்.

yasini

Do you like the story?

Please Appreciate the Author by clapping!