பி.ஜே.பி-யின் திட்டத்தில் இதுதான் நல்ல திட்டம்! - தா.பாண்டியன் பாராட்டு

 

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் மதுரையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். வடகிழக்குப் பருவமழை தொடர்பாகக் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான பணிகள் செய்ய்யப்படவில்லை.

வடகிழக்குப் பருவ மழை 19 மாவட்டகளில் அறிகுறிகள்கூட தென்படவேயில்லை. கடலோர மாவட்டங்களிலாவது ஆயத்த பணிகள் செய்து ஏரி குளங்களைத் தூர்வார வேண்டும். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்திய அளவில் 2 வதுபெரிய நதியான கோதாவரியிலிருந்து காவிரிக்கு இரும்பு பைப்புகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார் . இந்த திட்டம் மிகவும் பயனுள்ளது.  பி.ஜே.பி அரசின் திட்டத்தில் உருப்படியான நல்ல திட்டம் இதுவாகத்தான் இருக்கும். 

 இதனால் 4 மாநிலம் பயன்பெரும். எனவே தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய முதலைமைச்சர்கள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசோடு செயல்பட வேண்டும். கோதாவரியின் நீர் 45%தான் பயன்பட்டு வருகிறது. மீதம் கடலுக்குதான் செல்கிறது. எனவே, இதை முறையாகப் பயன்படும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் புதிய மணல் குவாரிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இது கண்டிக்கத் தக்கது. ஏற்கெனவே இருக்கும் மணல் குவாரியை மூடும் செயலை ஈடுபடுவதை விட்டுவிட்டுப் புதிதாகத் திறக்க உள்ளார். இது வேதனைக்குரியது. பிற நாடுகளில் மணல் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதை இருக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டைக் குறைத்து தமிழக மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும், இதற்கு முன் சுரண்டியெடுத்த மண்களுக்குப் பதிலாகத் தற்போது ஆற்று ஓரங்களில் வெளிநாட்டு மணல்களை நிரப்பிச் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகத் தேர்தல் நிறுத்தப்பட்டது பிற மாநிலங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லையா. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஏன் தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடிவதில்லை எனக் கேள்வியெழுப்பினார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!