கொந்தளித்த கோவை மக்கள்: ஆளுங்கட்சி வரவேற்பு வளைவுகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி!

கோவை அவிநாசி சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனரால் ஏற்பட்ட உயிர்ப் பலியைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பேனரை அகற்றினர்.

கோவை

கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையை மறித்து விமான இளைஞர் பலிநிலையம் முதல் வ.உ.சி பூங்கா மைதானம் வரை 9 கி.மீ தொலைவுக்கு அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் நேற்று மாலை நடைபெற்றன. இதனால் அவிநாசி சாலையில் மாலையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். ஆனால், போக்குவரத்து நெரிசலைப் பொறுப்படுத்தாது தொடர்ந்து பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று இரவு அலங்கார வளைவுகளுக்காகக் கட்டிய மூங்கில் கம்புகள் வெளியே நீட்டியபடி இருந்துள்ளது. இதனால், அவ்வழியே சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரகு என்பவர் அந்தக் கம்புகளில் மோதி விழுந்து மரணமடைந்தார்.

வெளிநாட்டிலிருந்து திருமணத்துக்காகப் பெண் பார்க்க சொந்த ஊர் வந்திருந்த ரகு, அகால மரணமடைந்ததால் அவரது ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைப் பொருட்படுத்தாமல் வைக்கப்பட்ட ஆர்ச் பேனர்களால் ஓர் உயிர் பலியானதால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதையடுத்து இன்று முதன்முறையாக ஆளுங்கட்சியினர் வைத்த ஆர்ச் பேனர்களை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதுவரையில் நேற்று இரவு நடந்த சாலை விபத்து குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!