அ.தி.மு.க தொண்டர்களுக்கு பகவத் கீதை பரிசளிப்பு! - பி.ஜே.பி-யில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?

அ.தி.மு.க தொண்டர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பகவத் கீதை புத்தகத்தைப் பரிசளித்ததால், அவர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


புதுக்கோட்டை நகரில் உள்ள நகர்மன்றத்தில் நேற்று முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வந்தார். அவரைச் சுற்றி அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் இருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பகவத்கீதை நூல்களை எடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன் அருகே நின்றுகொண்டிருந்த கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அந்தப் பகவத்கீதை நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். இதைக் கண்டவர்கள் தங்களது மொபைல் கேமராவில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டு, 'விஜயபாஸ்கர் விரைவில் பிஜேபியில் இணைகிறார்' என்று பரபரப்பு தீயைக் கொளுத்திப் போட்டார்கள்.

"அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களுக்குப் பரிசளிக்க கட்சி சார்ந்த,வேறுதுறை சார்ந்த புத்தகங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுட்டு பகவத்கீதை புத்தகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏன் கொடுக்க வேண்டும். இந்தச் செயல் மூலமாக, தான் விரைவில் பி.ஜே.பி-யில் இணையப்போகிறேன் என்பதைத்தான் அவர் மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார்" என்ற பேச்சு பலமாகப் புத்தகக் கண்காட்சியைக் காண வந்தவர்கள் மத்தியில் அடிப்பட்டது.

"பகவத்கீதை இந்துக்களுக்கான நூல். அந்த வகையில் அமைச்சர் வழங்கினார். இதில் எந்த உள்அர்த்தமும் உள்நோக்கமும் இல்லை" என்கின்றனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!