சசிகுமார் - அசோக்குமார் நட்பின் பின்னணி! | Friendship between Sasikumar and Ashok kumar

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (25/11/2017)

கடைசி தொடர்பு:15:46 (25/11/2017)

சசிகுமார் - அசோக்குமார் நட்பின் பின்னணி!

இயக்குநர் சசிகுமார் அப்படியென்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நட்பு என்கிற வார்த்தைதான. நட்புக்காக உயிரைக்கொடுக்கும் படங்களாக எடுத்த சசிகுமாருக்காக உயிரைக் கொடுத்துள்ளார் அசோக்குமார். சசிகுமாருக்கும் அசோக்குமாருக்கும் அப்படி என்ன நட்பு? 

கல்லூரி முடித்தவுடன் தன் அப்பாவிடம் சென்ற சசிகுமார் தனது திரைப்பட ஆசையைச் சொல்லியிருக்கிறார். அப்போது சசிகுமாரின் அப்பா சொன்னது இரண்டே கண்டிஷன்தான். முதல் கண்டிஷன் உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், இரண்டாவது தன் மைத்துனர் மகன் அசோக்குமாரைக் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த இரண்டு கண்டிஷன்களை ஒப்புக்கொண்ட பிறகுதான் சசிகுமாரின் சினிமா ஆசைக்கு ஓகே சொல்லப்பட்டது. சசிகுமார் சென்னைக்கு கிளம்பும்போதே அவரை முழுக்க முழக்கப் பார்த்துக்கொள்ள மட்டுமே அனுப்பப்பட்டவர் அசோக்குமார். சசிகுமாருக்கும் அசோக்குமாருக்கும் இருந்த 30 ஆண்டுகால நட்பு. சசிகுமாரின் பெர்சனல் விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரே ஆளாக இருந்தவர் அசோக்குமார்தான்.  

 

 

தன் வாழ்நாள் முழுவதும் தன் தாய்மாமா மகாலிங்கம் குடும்பத்துக்கு உதவியாக இருந்து அப்பா காப்பாற்றிய பெயரைத் தக்க வைக்க முடியாமல் முதலாளியும் நண்பனுமாகிய சசிகுமாரைச் சிக்கலுக்கு உள்ளாக்கிவிட்டதே என்கிற குற்ற உணர்ச்சியில், நண்பனுக்காக உயிரை விட்டுள்ளார். நட்புக்காக உயிரைக்கூட கொடுக்கலாம் என்று படம் எடுத்த சசிகுமாருக்காக உயிரைக்கொடுத்து அதை உண்மையாக்கிவிட்டுப் போயிருக்கிறார் அசோக்குமார். 

சசிகுமார் கலங்கி நின்ற போதெல்லாம் அவரைத் தாங்கி நின்ற ஒரே தோள் அசோகுமாரின் தோள். இன்று அவரே இல்லை. சசிகுமாரை யார் தேற்றுவார் என்றே தெரியவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க