பிரியாணி விருந்து வைத்து குறைகளைக் கேட்ட எம்.எல்.ஏ!

மதுரைக் கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க  எம்.எல்.ஏ மூர்த்தி, தன் தொகுதியிலிருந்து மதுரை மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்ட 11 வார்டுகளில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். புறநகர் பகுதிகளான ஆனையூர், திருப்பாலை, வண்டியூர், உத்தங்குடி, பரசுராம்பட்டி என இந்த 11 வார்டுகளையும் மாநகராட்சியில் இணைக்கப்பட்டும் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதால் இப்பகுதி மக்கள் பல அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

பிரியாணி விருந்து

தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இப்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில், இன்று கட்சி சார்பில்லாமல் அவர்கள் அனைவரையும் வரவழைத்து புகார்களைப் பெற்று ஆலோசனை நடத்தினார். இதை ஒரு மாநாடுபோல ஏற்பாடு செய்திருந்தார். மக்களிடம் புகார்களின் அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டு12 தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுப்பது எனவும், நிறைவேறாதபட்சத்தில் போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள். அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், ஐஸ் க்ரீம், பழத்துடன் அறுசுவை விருந்தளித்து மனம் குளிர வைத்தார் மூர்த்தி எம்.எல்.ஏ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!