வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (25/11/2017)

கடைசி தொடர்பு:19:15 (25/11/2017)

" ரஜினி வேண்டாம்; கமல் வந்தால் ஊழல் ஒழியும்!" - விகடன் சர்வே முடிவு #VikatanSurveyResult

ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொன்டிருந்த வேளையில்,  "அரசியலுக்கு வர இப்போதைக்கு அவசரம் இல்லை. என்னுடைய பிறந்த நாளுக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க உள்ளேன்" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

 

 

4) ரஜினி, கமல் இருவரில் யார் அரசியலுக்கு வந்தால், அரசியலில் மாற்றம் உண்டாகும்... என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை ஓரிரு வரிகளில் பதிலளிக்கவும்....

*Kamal vara vendum, avaridam oru thelivu irukirathu 

*Nothing is going to change

*யார் வந்தாலும் நல்லது நடக்காது; சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

*NO CHANGE WILL HAPPEN UNTIL AND UNLESS TAMILNADU PEOPLE BELIEVE THEMSELVES AND CHOSE GOOD LEADERS WHO IS CORRUPT FREE INSTEAD OF THIS FILM FRATERNITIES AND FAKE POLITICIANS WHO LOOTS MONEY FROM EVERYONE.

*கமல்ஹாசன் வரலாம். நல்ல மாற்றங்களையே எதிர்பார்க்கிறேன்.

*'ரஜினி கடைசி வரை வருவேன்' என்று கூறிக்கொண்டே தனது படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வார்.

*கமல் வருவார். ஆனால் அவர் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தனது கருத்துக்களைப் பதிய வேண்டும்.

*கமல் வருவது நல்லது. ஊழலை ஒழிப்பது கடினம். மற்றவற்றில் முன்னேற்றம் ஏற்படலாம்.

*No great changes. Politician may be replaced by another politician. If any miracle happens, we can expect little bit changes.

*ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெளிப்படைத்தன்மை நிலவும் என்று நம்புகிறேன் மற்றும் நீர் மேலாண்மை நன்றாக இருக்கும்.

*மக்களிடம் கொள்கைரீதியிலான அரசியல்பார்வை விலகி, பிம்ப அரசியலும், பண அரசியலும் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலைப்பாடு எதிர்கால அரசியலுக்கு உகந்தது அல்ல. அதற்கான ஒரு உதாரணம், இன்றைய அ.தி.மு.க. எனலாம். கமலிடம் தலைமையை மையம் வைத்து அரசியல் இருக்காது என்று உணர முடிகிறது.

*கமல்ஹாசன் வரவேண்டும். மக்கள் பணியில் அதிக அக்கறையும் உறுதியும் உண்டு. ஜனநாயக நாட்டுரிமையை வளர்ப்பார்.

*இதுவரை மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அதையேதான் இவர்களும் செய்வார்கள்.

*Rajini is very honest person. I am sure he will do the best for TN people. Good luck Rajini Sir!

*Both will come to politics and future politics in tamilnadu will revolve around these two. Rajni will succeed and there will be less corruption. Tamilnadu will join the mainstream of Indian politics.

*கமல்ஹாசன் வந்தால் அரசியலில் ஓரளவு மாற்றங்கள் நிகழும்.

*ரஜினி வந்தால் நல்லது. ஆனால், நல்லவர்களுக்கு தமிழக அரசியலில் இடம் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்