மக்களைத் தேடி அரசு செல்லும்..! அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

  

கரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் கிராமமான நன்னியூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், நன்னியூர் ஊராட்சிப் பகுதிகளில் 16 இடங்களில் பொதுமக்களிடமிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரூர் ஒன்றியம், நன்னியூர் ஊராட்சி பகுதிகளில் 16 இடங்களில் பொதுமக்களிடமிருந்து பொதுமக்களின் தேவைகள், குறைகள் பொதுவான குடிநீர், கழிவறை, மின்விளக்கு தொடர்பாக பொதுமக்களின் இருப்பிடம் தேடிச்சென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மனுக்களை பெற்று உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது நன்னியூர் ஊராட்சியைச் சேர்ந்த அண்ணாநகர்காலனி, வடுகர் தெரு, என்.புதூர், வடக்குத்தெரு, பகவதி நகர் காலனி, நன்னியூர், செவ்வந்திபாளையம், செவ்வந்திபாளையம் அம்பேத்கர் நகர், பாரதியார் நகர், சாந்தன்கலம், இரட்டை மரத்தான் கோவில், கோவில் பாளையம், பள்ளக்கோரை, என்.குளத்தூர், சித்தாதியூர், துவாரபாளையம், துவாரபாளையம் கோவில் ஆகிய 16 இடங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெற்றார். 

இந்நிகழ்ச்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, 'மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடிச் சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகள் சம்மந்தபட்ட கோரிக்கைகள் மனுக்களாக பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. குறைகள் உடனடியாக சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மண்மங்கலம் வட்டாட்சியர் ராம்குமார், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கமலக்கண்ணன், திரு.வி.க., மார்கன்டேயன்,என்.எஸ்.கிருஷ்ணன், ஊராட்சி செயலர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!