சிங்கப்பூரிலும் ஆவின்பால் விற்பனை..! ராஜேந்திர பாலாஜி அசத்தல் முயற்சி

தமிழக மக்களுக்கு பிடித்தமான ஆவின் பால் இன்று முதல் சிங்கப்பூரில் கிடைக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தமிழக பால்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விற்பனையைத் தொடங்கி வைத்து பேசும்போது, 

சிங்கப்பூரில் ஆவின்

"தமிழகத்தில், பால் கொள்முதல் மற்றும் விற்பனையில், ஆவின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சந்தையில் போட்டியிடும் வகையில் விதவிதமான பால் பொருட்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அவை, மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஆவின் பால் பொருட்கள், முதல் முறையாக கடல் கடந்தும் தன் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது. தெற்காசிய நாடுகளிலும் ஆவின்பால் விற்பனையை தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதால் தற்போது சிங்கபூரில் ஆவின் விற்பனையை துவங்கியுள்ளோம். ஆவின்பாலுக்கு சிங்கபூா் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். மலேசியா, துபாய், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் ஆவின் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆவின்பால் உலகத்தை சுற்றி வரும். அதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!