அரசியல் களமான புதுக்கோட்டை புத்தகத் திருவிழா..! | Pudukottai Book Festival be like a political place

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (26/11/2017)

கடைசி தொடர்பு:09:57 (26/11/2017)

அரசியல் களமான புதுக்கோட்டை புத்தகத் திருவிழா..!

ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அதன்பிறகு இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்துவிடும்
இரட்டை இலையை முடக்க சொன்னவர்களிடமே அதை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது" என்று புதுக்கோட்டை புத்தக கண்காட்சியில் கூறி, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் ரத்தின சபாபதி. இவர், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க உறுப்பினர்.புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. இதில் கலந்துகொள்ள வரும் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளைச் சேர்ந்த அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் களமாக மாற்றி, பரபரப்பைக் கிளப்பி வருகிறார்கள். அந்த வகையில், இன்று காலையில் கலந்துக் கொள்ள வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க தொண்டர்களுக்கு பகவத் கீதை வழங்கி பரபரப்பைக் கிளப்பி விட்டுச் சென்றார். மாலையில் வந்த தினகரன் அணியைச் சேர்ந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி அவர் பங்குக்கு மேற்படி  பேசிவிட்டுச் சென்றார். அறிவை வளர்க்க பயன்படுத்த வேண்டிய புத்தகக் கண்காட்சியை அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது அரசியல் களமாக பயன்படுத்தி வருவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களை பதிவு செய்ய வேறு வேறு தளங்கள் இருக்கிறது. இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகளை பயன்படுத்த வேண்டுமா?" என்று புதுக்கோட்டை மாவட்ட சமூக ஆர்வலர்கள் வருத்தமுடன் கேட்கிறார்கள்.