வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (26/11/2017)

கடைசி தொடர்பு:14:16 (26/11/2017)

நாட்டுப்படகை மூழ்கடித்ததா  கடலோரக் காவல்படை? - கொந்தளிக்கும் மக்கள்

பாம்பனில் இருந்து நண்டு பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களின் நாட்டுப்படகினை இந்திய கடலோரக் காவல்படை கப்பல் மோதி மூழ்கடித்ததாக புகார் எழுந்துள்ளது.

fisherman

மயக்க நிலையில் மீனவர்..
 

கடலில் காயங்களுடன் தத்தளித்த மீனவர்கள் மணிகண்டன், நாகேந்திரன் ஆகியோருக்கு  மண்டபம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலோரக் காவல்படையை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படை துப்பாக்கிசூடு நடத்திய சம்பவமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.