வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2017)

கடைசி தொடர்பு:10:25 (27/11/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது. 

ஆர்.கே.நகர்

(பழைய படம்)


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், இன்று (நவம்பர் 27-ம் தேதி) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

தேர்தலில், அ.தி.மு.க சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து நிற்கும் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயத்தைக் களம் இறக்கியுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.

வேட்புமனுத் தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசிநாள். ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். 9 அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என ஆர்.கே. நகர் தொகுதி களைகட்டத் தொடங்கியுள்ளது.