வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (27/11/2017)

கடைசி தொடர்பு:09:02 (27/11/2017)

ஜெயலலிதாவின் மகள் என்று உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு! மீண்டும் தொடங்கும் சர்ச்சை

ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்கக்கோரி, மஞ்சுளா என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் இறந்ததிலிருந்து இன்று வரை கட்சி சார்ந்த குழப்பங்கள் நீடித்துவருகின்றன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்கக்கோரி, மஞ்சுளா @ அம்ரூதா என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நான் பிறந்ததிலிருந்து பெங்களூருவில் வசித்துவருகிறேன். நான், ஜெயலலிதாவுக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை. 1980-ம் ஆண்டு பிறந்தேன்.

இந்த உண்மை எனக்கு மார்ச் மாதம்தான் தெரியும். இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும். ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஜெயலலிதா மகன் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.